ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இன்று முதல் செயலி மூலம் வருகைப்பதிவு..!
அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இன்று முதல் செயலி மூலம் வருகை பதிவு சட்டம் அமலாகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு செயலி மூலம் வருகை பதிவு மேற்கொள்ளப்பட உள்ளதாக கடந்த 25ஆம் தேதி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இந்த செய்தி குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இந்த நிலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் இன்று முதல் வழக்கமான வருகை பதிவேட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் கல்வித்துறை செயலி மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் தந்தி தொலைக்காட்சி வெளியான செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




