கள்ளக்காதலனோடு ஓடிய பெண்ணை கடலில் விழுந்ததாக நினைத்து தேடிய கணவர்..!
ஆந்திராவில் கடற்கரையில் இருந்து தப்பித்து கள்ளக்காதலனோடு ஓடிய பெண்ணை கடலில் விழுந்ததாக நினைத்து கணவர் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் மூலம் தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்த சாய் பிரியாவுக்கும் அவருடைய உறவினரான சீனிவாசன் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திங்கள்கிழமை கணவன் மனைவி இருவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரையில் உள்ள கடற்கரையில் இருவரும் சென்று அமர்ந்து இருந்த நிலையில் ஸ்ரீநிவாசனுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்பொழுது கணவன் கவனிக்காத நேரம் பார்த்து சாய்பிரியா அங்க இருந்து தப்பியுள்ளார்.
மனைவியை காணவில்லை எனவும் மனைவி கடலில் விழுந்ததாக நினைத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து ஹெலிகாப்டர் மூலம் மனைவியை சீனிவாசன் தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில் சாய்பிரியா நெல்லூரில் இருப்பதாக உறவினர் மூலம் வந்த தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் சாய்பிரியாவை விசாபட்டினம் அழைத்து வந்து விசாரித்த அப்பொழுது வேறொரு நபரை காதலிப்பதாகவும் திருமணத்திற்குப் பின்பும் இருவரும் பழகி வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




