--- --:--:-- --

ஒரே ஒரு ஊசி மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதால் அதிர்ச்சி..!

9.1

த்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே ஒரு ஊசி மூலம் 39 மாணவர்களுக்கான தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய பிரதேச மாநிலத்தின் சார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒரு ஊசியின் மூலம் முப்பத்தி ஒன்பது மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி தடுப்பூசி போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இது தொடர்பாக தடுப்பூசி செலுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தியவர் தலைமறைவாகியுள்ளார், தடுப்பூசி செல்லப்பட்ட மாணவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon