--- --:--:-- --

ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை..!

5

பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட அனுமதிக்கக் கூடாது என்று கோரி முதல்வர் பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

 

விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம் எனவும் பொதுக்குழு செயல்படும் முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

 

இந்த நிலையில் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பின்னரே ஓ பன்னீர்செல்வம் அளித்த மனுவில் எந்த ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுவாக இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon