--- --:--:-- --

வீட்டை விட்டு வெளியேறி பர்தா அணிந்து சுற்றி வந்த இளைஞர்..!

9

கர்நாடகாவில் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பெண் போல பர்தா அணிந்து கொண்டு சுற்றி வந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விஜயபுரா மாவட்டத்தில் பர்தா அணிந்த ஒரு பெண் சுற்றித்திரிந்தது கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் பெண்ணல்ல ஆண் என்பது தெரியவந்தது.

 

ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன ஸ்வாமி என்ற அந்த இளைஞர் விருப்பமில்லாமல் வீட்டார் திருமண ஏற்பாடுகள் செய்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் யாரும் தன்னை கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக பெண் வேடமணிந்து சுற்றித் திரிவதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon