திருப்பூரில் கந்துவட்டி வாங்கிய பைனான்ஸ் உரிமையாளர் கைது..!
திருப்பூர் மாநகரம் வடக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோல்டன் நகரில் மாரியம்மாள் என்ற 36 வயது பெண்ணும், அவரது கணவர் பாலன் என்பவரும் திருப்பூர் பவானி நகரில் எஸ்.கே.பைனான்ஸ் நிறுவனர் சுகுமார் என்பவரிடம் 15 ஆயிரம் ருபாய் கடனாக வாங்கியுள்ளார்.
வாங்கிய கடனை வறுமை காரணமாக திருப்பி கொடுக்க முடியாததால் அதிக வட்டிக்காக கடந்த 17ம் தேதி சுகுமார் மாரியம்மாள் வீட்டிற்கு சென்று சமையல் செய்ய வைத்திருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து சென்றுவிட்டார். இது தொடர்பாக சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க மாரியம்மாள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் M.S. முத்துசாமி . இ.கா.பவிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், திருப்பூர் மாநகரம் , வடக்கு மாவட்ட துணை ஆணையர் திரு.அபினவ் குமார் , இ.கா.ப , அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து 32 வயதான சுகுமார் மணச்சநல்லூர் , திருச்சி மாவட்டம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . விரைவாக கைது செய்த காவல் ஆளினர்களை பாராட்டி ஆணையர் பொறுப்பு திருப்பூர் மாநகரம் அவர்கள் பண வெகுமதி அளித்தார் .
📱 Share on WhatsApp 𝕏 Share on X




