--- --:--:-- --

மாணவியின் காலை சுற்றிக் கொண்ட பாம்பு..!

5

அரசுப் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் மாணவியின் காலை பாம்பு ஒன்று சுற்றிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி திங்கள் அன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார்.

 

நுழைந்த சிறுமி வழியில் படுத்திருந்த பாம்பை தவறுதலாக மிதித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் அந்த பாம்பு அந்த சிறுமியின் காலைச் சுற்றிக் கொண்டது எனவும் பாம்பை அப்புறப்படுத்த காலை உதறிய போது அருகில் இருந்த அலமாரியில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.

 

இதையடுத்து அந்த சிறுமிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுமிக்கு பாம்பு கடித்தபடி எந்த அடையாளமும் இல்லை எனவும் அவர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon