--- --:--:-- --

மகன் அடித்து விட்டதாக தாய் கண்ணீர் மல்க போலீசில் புகார்..!

4

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெற்ற மகன் தன்னை அடித்து விட்டதாக தாய் கண்ணீர் மல்க போலீசில் புகார் அளித்திருக்கிறார். காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது மகன் ஆகியோர் அருகருகே உள்ள இரண்டு வீடுகளில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

 

பொன்னம்மாள் தனது வீட்டின் கதவை மாற்றி அமைத்து கட்டிட வேலை செய்து வருகிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரிடம் தனது மகன் தகராறு செய்திருக்கிறார். இந்நிலையில் ஆத்திரமடைந்த மகன் கடுமையாக தாக்கிய போது பல் உடைந்து ரத்தம் கொட்டியது.

 

அப்படியே ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு செல்லாமல் பொன்னம்மாள் நேரடியாக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது மகன் மீது காவல்துறையினர் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon