காதலிக்க மறுத்ததால் இளம்பெண் மீது வெறி தாக்குதல்..!
புதுச்சேரி சன்னியாசி குப்பம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். நாகராஜ் என்பவரின் மகளான கீர்த்தனாவை அவரது முதல் மனைவியின் தம்பி மகேஷ் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கீர்த்தனா கல்லூரி முடிந்து திரும்பிய போது அவரிடம் முகேஷ் பேச முயன்றதாகவும் மாணவி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக வெட்டிவிட்டு முகேஷ் தப்பியோடினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தலைமறைவாக உள்ள முகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




