ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாளை காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன்..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கலவரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக வைத்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
குறிப்பாக தஞ்சை மருத்துவமனை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேரில் சென்று சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாளை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேருக்கு தனித்தனியாக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் வரும் 20ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.





