நீட் தேர்வில் கேள்வித்தாளை மாற்றிக் கொடுத்ததால் பரபரப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற நீட் தேர்வில் கேள்வித்தாளை மாற்றிக் கொடுத்ததால் மாணவர்கள் கேள்வி எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது. அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்றது.
மதியம் 2 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு 2.45 மணிக்கு தான் மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுபோன்ற குழப்பங்களால் மாணவர்களின் மனநிலையும் தேர்வு எழுதும் மனநிலை பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.





