ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இளைஞர்..!
புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வங்கியின் மேலாளர் காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தின் திரையை கத்தியால் உடைத்துவிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இயந்திரத்தில் இருந்து பணம் வராத விரக்தியில் இவ்வாறு செய்தாரா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




