--- --:--:-- --

தாய்-மகன் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு..!

10

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெளிப்புறமாக பூட்டப்பட்ட வீட்டுக்குள் தாய்-மகன் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

செந்தாமரைக்கண்ணன் என்பவரது இரண்டாவது மனைவி கமலாவும் அவரது மகனும் வீட்டில் சடலம் கிடப்பதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் செந்தாமரைக் கண்ணனுக்கு மூன்று மனைவிகள் இருப்பதாகவும் இரண்டாவது மனைவி கமலாவும் மூன்றாவது மனைவி சத்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

நேற்றிரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆத்திரத்தில் சத்யா இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon