கடல் சிங்கத்தின் மேல் அமர்ந்து இருந்த குழந்தை..! நொடிப்பொழுதில் தப்பியது..!
ரெடிட் இணையதளத்தில் பகிர்ந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. கடல்சிங்கம் ரோட்டில் படுத்து இருக்க அதன் மேல் குழந்தை ஒன்று உட்கார்ந்து உள்ளது. இதை குழந்தையின் பெற்றோர் படம் பிடித்துக் கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த கடல் சிங்கம் தலையை திருப்பி குழந்தையை கடிக்க முயல்கிறது.
அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை நிலைதடுமாறி கீழே விழுந்தவுடன் உடனே குழந்தையின் பெற்றோர் பதறிப்போய் குழந்தையை மீட்டு விடுகின்றனர். வேடிக்கையாக இருக்கும் என நினைத்து நொடிப்பொழுதில் ஆபத்தில் முடிந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




