வெள்ளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய யானையும், பாகனும்..!
கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி யானையும் பாகனும் போராடி கரை திரும்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் யானை ஒன்று கரையை சென்றடைய முயற்சிக்கிறது. யானையை காப்பாற்ற அதன் மீது ஏறி அமர்ந்து பாகன் கரை செல்ல வழி காட்டிக் கொண்டிருந்தபோது யானையின் தலை சென்று கொண்டிருந்த வெள்ளத்தால் யானை தும்பிக்கையை மட்டும் நீட்டியுள்ளது.
யானையும், பாகனும் உயிருக்கு போராடிய நிலையில் அதிர்ஷ்டவசமாக கரைக்கு திரும்பியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




