அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
திசைவேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரி, மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




