ஸ்ருதிஹாசன் உடல் நலம் குறித்து வெளியாகும் தவறான செய்தி..!
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தனது உடல் நலம் குறித்து வெளியாகும் தவறான செய்திகளையும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சனை உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
ஹார்மோன் பிரச்சனையால் தான் பாதிக்கப்பட்டதையும் அதைத்தான் எதிர்கொள்ளும் விதம் குறித்தும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தனது பிசிஓஎஸ் ஹார்மோன் பிரச்சினையை சிலர் தவறாக விமர்சிப்பதாக சுருதிஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும்.
எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தான் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர் பெண்கள் பலருக்கும் இந்த ஹார்மோன் பிரச்சினை இருப்பதாகவும் அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என்று சமூக நோக்கத்துடனும் அந்த வீடியோவை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




