லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல்..!
திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் சரஸ்வதி கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் லீனா மணிமேகலை மீது தாக்குதல் நடத்தப்போவதாக அதிரடி சரஸ்வதி மிரட்டியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் சரஸ்வதி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





