மாணவர்கள் படிக்கட்டில் சாகச பயணம்…கீழே விழுந்து பலத்த காயம்..!
திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகின்றனர். இதற்கு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செல்லும் அரசுப் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பதினோராம் வகுப்பு மாணவன் ஓடும் பேருந்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளை அரசு செய்து வரும் நடையில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் இப்படி பயணம் செய்வது வேதனையடைய வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





