மாமியாரை கட்டையால் சரமாரியாக அடித்து கொன்ற கொடூர மருமகள்..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மாமியாரை கட்டையால் அடித்த மருமகள் அவர் உயிரிழந்த செய்தி கேட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 75 வயது மூதாட்டியை அவரது மருமகள் செல்வி கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
ரத்த காயங்களுடன் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்த செல்வி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





