பீகாரில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு ..!
பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மின்னல் இடியுடன் பெய்த கனமழையால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர்.
மொத்தம் 10 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





