கேரளாவை சேர்ந்த தம்பதி பழனியில் தற்கொலை..!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் விடுதியில் கேரள தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். கோயில் அடிவாரத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த சுகுமாரன் சத்தியபாமா ஆகியோர் தங்களின் உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது இருப்பிடம் குறித்த தகவல்களை தெரிவித்து தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் விடுதிக்கு சென்று பார்த்தபொழுது இருவரும் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு எடுப்பதாக அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





