வேலூரில் ஜீப்புடன் சேர்ந்து சாலை அமைக்கப்பட்டதால் வேடிக்கை ..!
முதலில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சாலை போட்ட வேலூரில் இப்பொழுது ஜீப்புடன் சேர்ந்து சாலையை அமைத்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை அப்புறப்படுத்தாமலேயே முன்பு சிமெண்ட் ரோடு போட்டிருந்தனர்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓடாத பழைய ஜிப்பையும் அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார் சாலை போடப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்கள் புகார் அளித்ததை மாநகராட்சி ஆணையர் நேரில் வந்து கிரேன் மூலம் ஜீப்பை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





