தொட்டில் கட்டி கர்ப்பிணியை சுமந்து சென்ற அவலம்..!
போக்குவரத்து வசதி இல்லாததால் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி சென்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவின் தொட்டனே கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் வனத்துறை சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சாந்தா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீப் ஓட்டுநர் மற்றும் அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டுள்ளனர்.
அதனால் யாரும் வராததால் வேறுவழியின்றி தொட்டில் கட்டி நிறைமாத கர்ப்பிணியை எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




