ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் தலை துண்டித்து படுகொலை..!
ராஜஸ்தானில் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட தையல் கடைக்காரரை கொலை செய்துவிட்டு அதனை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மால்டா சாலையில் தையல் கடை வைத்திருந்த ஒரு நபர் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசியுள்ளார். நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அவரது கடைக்கு இளைஞர்கள் இருவர் துணி தைக்க வேண்டும் என சென்றுள்ளனர்.
அப்பொழுது ஒருவர் திடீரென அவரை தாக்கிய நிலையில் மற்றொரு பதிவை செய்துள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் நேரலையில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அந்த பகுதியில் இருபத்தி நான்கு மணி நேரம் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






