உடற்பயிற்சி செய்யும் ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்..!
சிவகங்கை அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் காவல்நிலையத்தில் கணவர் சரணடைந்தார். சூளைமேடு பகுதியை சேர்ந்த மார்க் ஆண்டனி அவரது மனைவி கற்பகம் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் உடற்பயிற்சி செய்யும் ஆயுதத்தால் கற்பகத்தின் தலையை தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சிவகங்கை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதில் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






