இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ..!
காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் கோயில் மண்டபம் பகுதியில் இருந்து காந்தி சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஆட்டோவை முந்தி செல்லும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.






