--- --:--:-- --

பிள்ளைகளால் கைவிடப்பட்ட 88 வயது மூதாட்டி

3

தர்மபுரியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 88 வயது மூதாட்டி ஆதரவற்ற நிலையில் நடமாடி வருவது பொதுமக்களை கலங்க வைத்துள்ளது. சேலம் மாவட்டம் ஏதாவூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்கு மூன்று மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

தர்மபுரிக்கு குடிபெயர்ந்த இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்து விட்டதால் குழந்தைகளை போராடி வளர்த்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் மகள் மகாலட்சுமி மற்றும் மகன் மாது வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அவர்கள் உரிய முறையில் பராமரிக்காததால் ஈஸ்வரி கைவிடப்பட்ட நிலையில் நெசவாளர் காலனியில் பாழடைந்த வீடு ஒன்றின் முன்பு வசித்து வருகிறார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon