பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி!
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கைலாஷபட்டினம் என்ற இடத்தில் நடந்த இந்த கோர விபத்தில் பட்டாசு தயாரிக்கும் அறைகள் தரைமட்டமாகின.
இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.






