--- --:--:-- --

தேவராயம்பாளையம்  ஜாமிஆ  ஆயிஷத்துத் துஹரா பெண்கள் ஷரீஅத் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா 3 ஆம் ஆண்டு விழா 

7

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்துள்ள தேவராயம்பாளையம் இ.எம். நகர் பள்ளிவாசலில் வீதியில் செயல்பட்டு வரும் ஜாமிஆ  ஆயிஷத்துத் துஹரா  பெண்கள் ஷரீஅத் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு விழா தேவராயன்பாளையத்தில் நடந்தது. விழாவிற்கு தேவராயம்பாளையம் மஸ்ஜிதே குபா பள்ளிவாசல் முன்னாள் இமாம் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.

 

திருப்பூர் மதரஸா தாருல் குர்ஆன் காதிரிய்யா பேராசிரியர் முஹமது சாஹிப் கிராத்துடன் தொடங்கியது. அவிநாசி ஜாமிஅதுல் இமாம் முஜத்தில்  அல்பிஸ்ஸானி ஷரியத் கல்லூரி தலைமை ஆசிரியர் சித்திக் அலி  வரவேற்றார்.  திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் உமர் பாரூக், தேவராயம்பாளையம் மஸ்ஜிதே குபா பள்ளிவாசல் தலைமை இமாம் ஜாபர் சாதிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

தாராபுரம் மஸ்ஜிதே ஜமால் பள்ளிவாசல் தலைமை இமாமும், திருப்பூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முன்னாள் செயலாளருமான அப்துல்லா தொடக்க உரையாற்றினார். பள்ளபட்டி ஜாமிஆ  உஸ்வத்துல் ஹசனா ஷரியத் கல்லூரி பேராசிரியர் அஹமது முஹ்சின் ரசாதி சிறப்புரை ஆற்றினார். முடிவில் கல்லூரி முதல்வர் இம்ரான் நன்றி கூறினார். விழாவில் ஆறு மாணவிகளுக்கு ஆலிமா பட்டமும், 14 குடும்ப பெண்களுக்கு நாசிக்கா பட்டமும் வழங்கப்பட்டது.

 

தொடர்ந்து  கல்லூரி மாணவிகளின் குர்ஆன் விளக்கம், மனனம், மார்க்க சட்ட விளக்கம், கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் அவிநாசி, மங்கலம், வடுகன்காளிபாளையம், பூண்டி, அவிநாசி, சேவூர் பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Right Menu Icon