கொரொனாவிலிருந்து குணமடைந்த 74 வயது மூதாட்டி!
கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த அவர் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் பூரண குணமடைந்த அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தியாவில் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 274 அதிகரித்துள்ளது. வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரொனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 549 அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 274 அதிகரித்துள்ளது.
411 பேர்கள் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4 ஆயிரத்து 814 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்து 18 பேருக்கும், தமிழகத்தில் 738 பேருக்கும் டெல்லியில் 576 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.







