ஸ்கேட்டிங் செய்யும் 73 வயது முதியவர்..!
73 வயது முதியவர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்வது சமூக வலைதளங்களில் வைரலாகியது. முதியவரின் வியப்பான ஸ்கேட்டிங் பயண விடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஸ்கேட்டிங் செய்வது பலருக்கு வேடிக்கையாகத் தோன்றினாலும் தான் விரும்பியதை செய்ய வயது ஒரு தடையில்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
எனினும் 1981 ஆம் ஆண்டு முதல் ஸ்கேட்டிங் செய்து வருகிறார். ஸ்கேட்டிங் செல்லும்பொழுது பயமோ தயக்கமோ இல்லை எனவும் கூறியுள்ளார். இன்றைய சமூகத்தில் பலர் 40 வயது ஆகிவிட்டாலே உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் சோர்ந்து போய் விடுகின்றனர்.
ஆனால் தள்ளாத வயதிலும் மனம் தளராமல் 73 வயது முதியவர் சாலையில் ஸ்கேட்டிங் செய்வது பலருக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.






