சரக்கு வாகனம் மோதி 6 வயது சிறுமி பலி..! ஆத்திரத்தில் ஓட்டுநரை கொன்ற பொதுமக்கள்..!
மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்புக்கு காரணமான சரக்கு வாகனத்தை பொது மக்கள் தீயிட்டுக் கொளுத்தியதுடன் அதன் ஓட்டுநரும் பலியானார். அழிராஜ்பூர் மாவட்டத்தின் பர்னிச்சர் கிராசிங் பகுதியில் அதிவேகமாக சென்ற சரக்கு வாகனம் சிறுமி மீது மோதியதில் 6 வயது சிறுமி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் சரக்கு வாகனத்தை சிறை பிடித்து அடித்து நொறுக்கி தீ வைத்தனர்தப்ப முயன்ற ஓட்டுநரையும் அவர்கள் தீயில் தள்ளிவிட்டனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.





