வரதட்சணை தராத மனைவிக்கு வீட்டுக்குள் சுவரை கட்டி அடைத்த கொடூர கணவன்..!
ஹைதராபாத்தில் வரதட்சணை தராததால் மனைவியை அறையில் அடைத்து கணவர் சுவர் வைத்த கொடூரம் அரங்கேறியது ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரபலமான குல்லாரெட்டி ஸ்வீட்ஸ் மிட்டாய் கடை 2 தெலுங்கு மாநிலங்களிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை வைத்துள்ளது.
இந்த கிளைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் குல்லா ரெட்டியின் பேரன் ஏக்னாத் ரெட்டி கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மனைவி மறுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஏக்னாத் ரெட்டி மனைவியை வீட்டின் கீழ் பகுதியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வெளியே வரமுடியாமல் சுவரைக் கட்டியுள்ளார். செல்போனில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். எனவே தகவல் அறிந்த போலீசார் அவரை வெளியே அழைத்து வந்தனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நபரை தேடி வருகின்றனர்.





