--- --:--:-- --

சேலத்தில் 6 டன் ரசாயன வாழைப்பழங்கள் பறிமுதல்

1

சேலம் சின்னக்கடை வீதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் எர்த்தோ ஃபார்ம் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 6 டன் எடையிலான வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இது தொடர்பாக ஐந்து வாழைப்பழம் வண்டி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட தோடு எர்த்தோ ஃபார்ம் ரசாயனம் மற்றும் தெளிப்பான் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி கதிரவன் ரசாயன மூலம் 10 மணி நேரத்தில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழத்தை உட்கொண்டால் அல்சர் மற்றும் தோலில் அலர்ஜி ஏற்படக் கூடும் எனவும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்தார்.

Leave a Reply

Right Menu Icon