கண்ணி வெடி விபத்தில் 6 ராணுவ வீரர்கள் காயம்..!
ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் ராணுவ வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர். ரஜவுரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, வீரர் ஒருவர் தவறுதலாக கண்ணி வெடியை மிதித்துவிட, குண்டு வெடித்துவிட்டது.
தீவிரவாதிகளை தடுக்க ராணுவம் புதைத்திருந்த கண்ணி வெடி, மழையில் அடித்து வரப்பட்டு இடம் மாறியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.






