கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா
தேமுதிக உடன் தவெக கூட்டணியா என்பது குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் வாக்கு வங்கி குறையவில்லை எனவும், இனி 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கியே தங்களது அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதாகவும், அதைதான் தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.






