--- --:--:-- --

பட்டியலினப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 நாட்கள் சிபிசிஐடி காவல்..!

6

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரை 6 நாட்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து உள்ளனர். விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

வழக்கில் தொடர்புடைய 8 பேரில் 4 பேர் சிறுவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் ஹரிஹரன், மாடசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் இந்த வழக்கில் சிறையில் இருக்கும் 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

 

காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி தரக் கோரி சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 6 நாட்கள் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

 

விசாரணைக்கு பின் வரும் திங்கள்கிழமை அவர்களை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள். பள்ளி மாணவர்கள் பயன்படுத்திய செல்போன் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

 

Right Menu Icon