--- --:--:-- --

காதல் மனைவியை கொன்று காட்டில் புதைத்த கணவன்..!

7

வேலூர் மாவட்டம் கேவி குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் விநாயக். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த பொழுது விநாயக் அதே கல்லூரி மாணவியான குடியாத்தம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுப்ரஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

 

பெற்றோர் எதிர்ப்பை மீறி முதலில் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட இருவரும் சென்னை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். பிறகு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அங்கிருந்து சொந்த ஊரான கே.வி.குப்பம்பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

 

சுப்ரஜாவிற்கு 2 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில் வினாயக் உள்ளூரில் தனக்கு கிடைத்த தினக் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுப்ரஜா அவரது உறவினர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது.

 

குறிப்பாக சுப்ரஜாவின் காதல் திருமணத்துக்கு பின்னர் அவரது தந்தை இறந்துவிட்டதால் சுப்ரஜா உடன் அவரது அத்தை தனலட்சுமி என்பவர் மட்டுமே நேரடியாகவும் செல்போனில் பேசி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவராலும் சுப்ரஜாவையும் தொடர்பு கொள்ள இயலாததால் நேரடியாக வீட்டிற்கே சென்று பார்த்துள்ளார்.

 

வீட்டில் சுப்ரஜா இருந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை இதனால் சந்தேகமடைந்த அவர் விசாரித்ததில் தவறான உறவை கண்டித்த மனைவியை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்ததை கணவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

Right Menu Icon