இந்தியாவில் 6 ஆயிரம் கோடி யூனிட் மின்சாரத்தை மீதம் ஆகியுள்ளது..!
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மரபுசாரா எரிசக்தி அளவை இன்னும் 2 ஆண்டுகளில் 175 மெகாவாட் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எரிசக்தியை சேமிக்கக்கூடிய 36 கோடி எல்இடி பல்புகள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு இருப்பதாகவும் தெருக்களில் ஒரு கோடியே 10 லட்சம் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி யூனிட் மின்சாரம் மீதம் ஆவதாகவும் பிரதமர் தெரிவித்தார். எரிசக்தி சேமிப்பு தொடர்பான கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார்.







