--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் 5 வது சுற்று முடிவுகள் வெளியீடு..!

10.6

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் 5 வது ரவுண்ட் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுவிபரம் வருமாறு :

 

திருப்பூர் வடக்கு தொகுதி 5 வது ரவுண்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 20039 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி 10195 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி ஈஸ்வரன் 3353 ஓட்டுகளும் பெற்றுள்ளார்.

 

தாராபுரம் பாஜக வேட்பாளர் முருகன் 19113 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி 17067 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

 

பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் 17882 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரையடுத்து திமுக வேட்பாளர் முத்துரத்தினம் 11676 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

உடுமலை தொகுதியின் 5 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் 18075 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் தென்னரசு 5380 வாக்குகள் பின்தங்கி 12095 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

 

திருப்பூர் தெற்கு தொகுதி 5 வது ரவுண்டில் செல்வராஜ் 11581 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் குணசேகரன் 37 ஓட்டுகள் பின்தங்கி 11544 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.

 

அவிநாசி தொகுதியின் 5 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் தனபால் தனபால் 18672 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக கூட்டணியின் ஆதித்தமிழர் பேரவை வேட்பாளர் அதியமான் ராஜு 12648 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

 

மடத்துக்குளம் தொகுதியின் 5 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 17623 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் 13810 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

 

காங்கேயம் தொகுதி 5 வது ரவுண்டில் திமுக வேட்பாளர் சாமிநாதன் 17338 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் 14365 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon