தமிழகத்தில் டிஎஸ்பி, ஏஎஸ்பிக்கள் என 55 பேர் பணியிட மாற்றம்..!
தமிழகத்தில் டிஎஸ்பி ஏஎஸ்பிக்கள் என மொத்தம் 55 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் மட்டும் 33 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கடலூர், நெல்லை, மதுரை, திண்டுக்கல் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் காவல்துறை அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.
பணியிடை மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனே பணிக்கு செல்லுமாறு டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டவர்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் சாக்குமூட்டையில் ஒரு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எஸ்பி ராஜன் ஆகியோர் தேர்தல் பணிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சிக்கு ஆட்சியராக திவ்யதர்ஷினி, எஸ்பியாக மயில்வாகனன், சார் ஆட்சியராக சுமதி ஆகியோரை புதிதாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.






