ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கும் 50 சதவீத பாடத்திட்டம் குறைப்பு..!
தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கும் 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரொனா காரணமாக இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பள்ளி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதனால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களை 40 சதவீதமாக பள்ளிக்கல்வித்துறை குறைத்து அதன் பிறகு அந்த மக்களுக்கு மட்டும் நேரடியாக பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முழு ஆண்டு தேர்வுக்காக மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு களுக்கும் பாடத்திட்டத்தை 50 சதவீதமாக குறைத்து பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.






