அரசு பேருந்து மோதி 5 மாத குழந்தை தலைநசுங்கி உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெற்றோரின் கண்முன்னே ஐந்து மாத ஆண் குழந்தை தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறையை சேர்ந்தவர் மல்லீஸ்வரன் மனைவி கௌசல்யா மற்றும் 5 மாத ஆண் குழந்தையுடன் வேங்கி பாளையத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது கொடுவாயூர் பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை ஜஸ்வந்த் உயிரிழந்த நிலையில் கௌசல்யாவின் இரண்டு கால்களிலும் சக்கரம் ஏறி இறங்கியது.
மல்லீஸ்வரன் இடதுபுறமாக விழுந்ததால் லேசான காயமடைந்தார். சாலை விரிவாக்க பணிகள் நடந்து வரும் இந்த பகுதியில் ஒரு வழிப்பாதையில் அரசு பேருந்து அதிவிரைவாக வந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில் தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை அவினாசி போலீசார் தேடி வருகின்றனர்.





