சொந்த வீடு கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை அரித்த கரையான்..!
ஆந்திராவில் வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கரையான் அரித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கிருஷ்ணா மாவட்டம் மயிலவரத்தை சேர்ந்தவர் ஜமாலியா.
பன்றி மேய்க்கும் தொழில் செய்து வரும் இவர் சொந்த வீடு கட்டும் கனவில் ஒரு இரும்புப் பெட்டியில் சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்து உள்ளார். சில நாட்களாக அந்த பெட்டியை திறந்து பார்க்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் மீண்டும் திறந்து பார்த்தபோது பெட்டியிலிருந்து 5 லட்ச ரூபாயும் கரையான்கள் அரிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இழந்த பணத்தை திரும்ப பெற ஜமாலியாவுக்கு அரசு உதவ வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.






