--- --:--:-- --

4ம் வகுப்பு மாணவனுக்கு பெற்றோர் மீது கோபம்..!

10

காணாமல் போன நான்காம் வகுப்பு மாணவனை நண்பர் வீட்டில் இருந்து மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

 

நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவனை பல இடங்களில் தேடினர். அவன் எங்கும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பொழுது சிறுவன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு தனது நண்பனின் வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது.

 

Right Menu Icon