--- --:--:-- --

47 ஆவது விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்கிறது..!

3

டெல்லியில் கடும் குளிரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 47 ஆவது நாளாக தொடர்கிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகளின் இந்த தொடர் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது.

 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகின்றனர். வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.

 

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஜனவரி 15ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon