--- --:--:-- --

வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்க இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு கோரிக்கை..!

2

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் க்கு தடை விதிக்க வேண்டுமென அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

 

வாட்ஸ்அப் இன் பயனுள்ள தகவல் பகிர்வு தொடர்பான கொள்கைகள் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த சங்கம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பற்றி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட தகவல்கள், பண பரிமாற்ற விவரங்கள் அவர்கள் வைத்துள்ள தொடர்பில் தகவல்களை பெற எந்த நோக்கத்திற்காக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 

எனவே வாடிக்கையாளர்கள் தகவல்களை அழித்து புதிய கொள்கையை கைவிட வேண்டுமென வாட்ஸ் அப்புக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அல்லது வாட்ஸ்அப் மற்றும் அதன் உரிமையாளர் பேஸ்புக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

வாட்ஸ்அப் இன் புதிய கொள்கையை தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து வரக்கூடாது என்றும் வணிகர்கள் கூட்டமைப்பு தன் கடிதத்தில் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon