கத்தியால் தாக்கிக் கொண்ட 4 இளைஞர்கள் கைது..!
சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கம் பக்கத்தில் நடுரோட்டில் கத்தியால் தாக்கிக் கொண்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த குணா, கோபி, சசி, உதய சேகர் ஆகியோர் அந்த பக்கத்தில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உதய சேகர் என்பவர் மட்டும் காவல்துறைக்கு தகவல் தருபவராக மாறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் நால்வரும் கத்தியால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.







