பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. டிராபிக் பிரசவம் பார்த்த செவிலியர்..!
உத்திரபிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்து உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென பிரசவவலி ஏற்பட்டது.
வலியால் துடித்த ரோகிணியை காப்பாற்ற அவரது கணவர் பொதுமக்களிடம் உதவி கேட்ட போது அந்த பகுதியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த செவிலியர்கள் கர்ப்பிணியை சாலையிலேயே படுக்க வைத்து துரிதமாக செயல்பட்டு தாயையும் குழந்தையையும் பத்திரமாக காப்பாற்றினார்.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தக்க நேரத்தில் உதவி செய்த செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





